×

மரபுவழி, நவீனபாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து கலைச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மரபுவழி கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி கலை வல்லுநர்களுக்கும் நுண்கலைத் துறையில் செய்துள்ள அரும்பெரும் சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில் ஆண்டுக்கு 6 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் என்னும் விருதும், தலா ரூ.1,00,000 வீதம் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறது.

50 வயதுக்கு மேற்பட்ட மரபுவழி மற்றும் நவீனபாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்.
* கலைச் செம்மல் விருதிற்கு படைப்பாளர்கள் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கலை அமைப்புகளோ, அரசு நிறுவனமோ, தனி நபர்களோ தகுதி வாய்ந்த கலைஞர்களை பரிந்துரைக்கலாம்.
* விண்ணப்பிக்கும் படைப்பாளர் நவீனபாணி அல்லது மரபுவழி பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும்/பரிந்துரை செய்யப்படும் படைப்பாளிகளின் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க 20 கலைப் படைப்புகளின் வண்ண ஒளிப்படங்கள் (A4 Size – Colour Photo) இணைத்தல் வேண்டும்.
* விண்ணப்பிக்கும் படைப்பாளர் / பரிந்துரைக்கப்படும் படைப்பாளர் குறித்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்திக் குறிப்புகள், கலை சார்ந்து வெளியிடப்பட்ட கட்டுரைகள், புத்தகங்கள், சான்றிதழ்கள் இணைத்து அனுப்பி வைத்தல் வேண்டும்.
* மாநில அளவில்/தேசிய அளவில்/உலக அளவில்/தனியார் அமைப்புகள் நடத்திய கலைக்காட்சிகளில் படைப்பாளர்களின் கலை படைப்புகள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
* விண்ணப்பிக்கும் / பரிந்துரைக்கப்படும் படைப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய முழு தன்விவரக்குறிப்பு (Profile) இடம் பெறுதல் வேண்டும்.

மேற்காண் தகுதிகளுடன் கீழ்க்காணும் முகவரிக்கு 20.01,2024 -க்குள் அனுப்பிவைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி;
ஆணையர்,
கலை பண்பாட்டுத் துறை
தமிழ் வளர்ச்சி வளாகம்,இரண்டாம் தளம்,
தமிழ்ச்சாலை,எழும்பூர்,சென்னை – 600 008.
தொலைபேசி: 044-28193157

The post மரபுவழி, நவீனபாணி ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து கலைச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Arts and Culture of the Tamil Nadu Government ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்